பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வேதியன் வாழ்த்தும் வேட்டுவர் வாழ்க்கையும் * கதிரொளி மறைந்த மாலைப்பொழுதில் காரிருள் எங்கும் சூழ்ந்தது. கலேயரசி மாதவி பால் கோவலன் கொண்டிருந்த உ ற வும் முறிந்துவிட்டது. கற்பரசி கண்ணகியின் இல் லம் தேடி அவன் கால்கள் விரைந்தன. காற் றெனக் கடுகிச் சென்ற அவன், நேரே தன் பைக்கொடி புனேயா ஒவியமாய்க் கிடந்த படுக்கையிடம் சேர்ந் தான்; அவள் வாடிய மேனி வருத்தம் கண்டான்; நெஞ்சு புண்ணு ன்ை; வஞ்கமும்பொய்யுமே வடிவெடுத்த மாயக் காரியோடு உறவு கொண்டேன்! நம் குலத்தார் தேடித்தந்த மலைபோலும் பொருட்குவையெல் லாம் பாழாயிற்று வறுமையுற்றேன்! வெட்கம் தருவது என்கிலே' என்று மனம் குமுறிப் பேசி ன்ை. தவக்கொழுந்தாகிய கண்ணகி அது