பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதியன் வாழ்த்தும் வேட்டுவர் வாழ்க்கையும் 35 கேட்டுக் குறுநகை புரிந்து, இரண்டு சிலம்பு கள் இன்னும் இருக்கின்றன; கொள்ளுங்கள்,' என்ருள் கரவறியாக் காதல் நெஞ்சத்தோடுஅன்று-அருளுள்ளத்தோடு, கண்ணகியின் வஞ்சமற்ற மொழிகள் கோவலன் உள்ளத்தை என்னவெல்லாம் செய்தனவோ அவன்காணும் படி அமைந்த நன்னயம் செறிந்த அம்மொழி க்ள், கோவலன் உள்ளத்தில் இத்தனே நாளும் கலையுணர்வு என்ற தண்ணிரால் அ விங் து கிடந்த கடமை உணர்வைத் தட்டி எழுப்பின. அவன் கண்ணகியைப் பார்த்து, சேயிழையே, நீ கூறிய இவ்விரு சிலம்புகளையே முதலாகக் கொண்டு வாணிகம் புரிந்து .ெ தா லே ந் த பொருளே எல்லாம் மீண்டும் திரட்டுவேன். அதன்பொருட்டு மாடங்கள் நிறைந்த மதுரைக் குப் போகத் துணிந்தேன். கோதாய், உடன் எழுக! என்று கூறினன். கண்ணகிக்குப் புறப்படு' என்று கோவ லன் கட்டளை இட்டான். ஆனால், அவனுக்கோ, அவன் தீவினேயே கட்டளையிட்டது. இருள் தொலைவதற்கு முன் காதலர் இருவரும் பூம் புகாரை விட்டு நீங்கினர். மதுரை நோக்கிச் சென்ற காதலருக்குக் கவுந்தி அடிகள் துணே கிடைத்தது. மூவரும் நாள் தோறும் காவதமல்லது கடவாராகி, மெல்ல மெல்ல நடந்து சென்று, இறுதியில் உறையூரை அடைந்தனர். அங்கிருந்து ஒருநாள் வைகறைப்