பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சிலப்பதிகார விருந்து பொழுதில் புறப்பட்டுத் தென்திசை நோக்கிச் செல்லத் தொடங்கினர்; செல்லும் வழியில் ஒரு பூங்காவினுள் புகுந்தனர். அங்கு யாரோ ஒரு முதியோன்-மறையோன்-பாண்டியன் புகழை மனமாரப் பாடி மகிழும் குரல் கேட்டனர். பாண்டி காட்டை நோக்கி ஆர்வத் துடன் சென்றுகொண்டிருந்த கோவலனது உள்ளம் அக்குரலில் மிகவும் ஈடுபட்டது. கோவலன் செவியையும் சிக்கனேயையும் கவர்ந்த அக்குரல், "எங்கள் கோமானுகிய மன்னவர் பெருந்தகை ஊழி ஊழி உலகங்காத்து நீடுழி வாழ்க! தேவர் கோணுகிய இந்திரன் பொருமை கொண்டு மதுரையை அழிக்கக் கடலே ஏவினன். அது கண்ட உக்கிர பாண்டியன் கூர்வேல் எறிந்து கடலேத் தன் கால் மட்டத்திற்கு வற்ற வைத்து அடக்கினன். அந்தப் பழம்பகையைப் பொரு மல் கொடுமை கிறைந்த கடல் குமுறி எழுந்து பஃறுளியாற்ருேடு பன்மலைகளையுடைய குமரிக் கோட்டையும் விழுங்கியது. அதனல், வடதிசை யிலுள்ள கங்கையாற்றினையும் இமய மலையினை யும் தன்னுடையன ஆக்கிக்கொண்ட தென்ன வன் வாழ்க! இந்திரன் சூட்டிய மாலையை மார் பிலேந்திய பாண்டியன் வாழ்க! எம் முதல்வ கிைய அமரர் கோனின் உச்சிப் பொன்முடி வளையை உடைத்தவன் இ ப் பாண் டிய ன்; எனவே, யாம் மழை பொழியோம்' எனச் சென்ற மழையைத் தன் ஆற்றலால் பிணித்து உலகெலாம் பெருவளம் சுரக்க ஆண்ட ೧೯೧೯