பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சிலப்பதிகார விருந்து திருவரங்கத்தில்-பலர் தொழுதேக்க நெடிய பொற்குன்றத்தில் நீலமேகம் படர்ந்ததுபோல ஆயிரக்தலேயுடைய ஆதிசேடன்மேல் திருவளர் மார்பனுய்ப் பெருமான் பள்ளி கொண்டிருக்கும் கோலத்தையும், பொங்கருவி பாயும் வேங்கட மலையுச்சியில் வில் பூண்ட கார்மேகம் போல கின்று கடவுள் காட்சி,தரும் கோலத்தையும் 'காட்டு, காட்டு என்று என் கண்கள் என் மனத்தைத் தாண்டியதால், யாத்திரையாக இங்கே கான் வந்தேன்; வழியில் பாண்டி நாட் டின் சிறப்பும் அறச்செய்கையும் கண் குளிரக் கண்டேன்; அதனல், பாண்டிய மன்னனே வாயார வாழ்த்தி இங்கிருக்கிறேன். என் வர விற்குக் காரணம் இதுவே. நான் குடகமலைப் பக்கத்திலுள்ள மாங்காடு என்னும் ஊரில் உள் ளேன், என்று பதிலுரைத்தான். தீதுதிச் சிறப்பின் தென்னனே வாழ்த்தி மாமுது மறையோன் வந்திருந் தோன யாது நும்மூர் ஈங்கென் வரவு!"எனக் கோவலன் கேட்பக் குன்றச் சிறப்பின் மாமறை யாளன் வருபொருள் உரைப்போன், நீல மேக நெடும்பொற் குன்றத்துப் பால்விசித் தகலாது படிந்தது போல ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறல் பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த விரிதிரைக் காவிரி வியன்பெருந்துருத்தித் திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும், வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்குயர் மலேயத்துச்சி மீமிசை