பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னே சர். தியாகராயர் கல்லூரித் தலைவர் பேராசிரியர் எம். கே. சண்முகம், எம். ஏ., எல். டி., அவர்கள் அணிந்துரை இன்றைய தமிழகத்தின் இலக்கிய ஆராய்ச்சி சீரிய முறையில் வளர்ந்து வருகின்றது. அதற்குக் காரணம் ஆசிரியர் ந. சஞ்சீவியைப்போன்ற தமிழ் அறிஞர்கள் கலேயுணர்ச்சியோடு செய்யும் தொண்டு தான். தமிழ் இலக்கிய ஆராய்ச்சிக்குத் தற்போதைய சூழ்நிலையில் இன்றியமையாதது ஆங்கிலக் கலே அறிவு என்பது என் மனத்தில் படுகின்றது. இதை அளவு கோலாகக் கொண்டு நமது தமிழ் நாட்டுச் செல்வங்களாகிய திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம் முதலிய ஒப்பற்ற காவியங்களின் உயர்வையும் பெருமையையும் எளி தில் அறியலாம். ஆங்கிலக் கண்களோடு பார்க்கும் திறமை ஆசிரியர் சஞ்சீவிக்கு இயல்பாக அமைந் திருக்கின்றது. அமரத்துவம் பெற்ற ஷேக்ஸ்பியர், மில்டன்,வார்ட்ஸ்வொர்த்து, ஷெல்லி, கிட்ஸ், பைரன் போன்ற ஆங்கிலக் கவிஞர்களேப் படித்து, ரசித்து அவர்கள் சித்திரித்துள்ள கருத்தோவியங்களைத் தமிழ்க் கவிதைகளிலும் கண்டு இன்புறும் வாய்ப் பைப் பெற்றிருப்பதன் பயனுக, சில ப் ப தி கார ஆராய்ச்சியில் மிக்க ஆர்வத்துடன் சஞ்சீவிஅவர்கள் ஈடுபட்டிருக்கின்ருர்கள். கடுகளவு போன்ற குறளில் கடல்போன்ற கருத்துக்கள் எவ்வாறு மிளிர்கின்ற னவோ, அ வ்வாறே சித்திரச் சிலப்பதிகாரமும் சொல்லழகும், பொருளழகும், கற்பனைத் திறனும், காதல் உணர்ச் சி யு ம், கற்பின் வீறும் ஒருங்கே