பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதியன் வாழ்த்தும் வேட்டுவர் வாழ்க்கையும் 43 மாகும். கூற்றுவன்ே ஒத்த வலி யுடனே வளைந்த வில்லைக் கையிலேந்திப் பகைவர் நாடு நோக்கிப் பாய்ந்து செல்லும் தொழிலே வாழ்க் கையாக உடைய அவர்கள் வேண்டும் வெற்றி களே எல்லாம் விரைந்து விரும்பிக் கொடுப்பாள் அவர் தம் குலத்தெய்வமாகிய கொற்றவை. வீர மறவர்கட்கு அவள் தரும் வெற்றிப் பரிசு கட்கு எல்லாம் மாருக அவள் எதிர் பார்ப்பது எல்லாம் ஆண் மைத் தன்மையோடு கூடிய அவிப்பலியாகிய கடன் ஒன்றுதான். கெற்றிக் கண் படைத்த குமரியாய்-தேவரும் போற்றும் பாவையாய் - விளங்கும் அவள் கோவிலே அடைந்தனர் கோவலனும் கண்ணகியும் கவுந்தி அடிகளும். மூவரும் கொற்றவையின் கோயிற்புறத்தே இளேப்பாறி இருந்த பொழுது, வேட்டுவக் குடி யில் தெய்வத்திற்கு வழிபாடு ஆற்றும் உரிமை படைத்த சாலினி என்பாள், தெய்வம் ஏறப் பெற்று, மயிர் சிலிர்க்க, கான வர் வியக்கக் கைகளே உயர்த்தி, எயினர் தாம் கவர்ந்த பொருளைச் சேர்த்துண்ணும் நடுவூர் மன்றத்து அடி பெயர்த்து ஆடி, மறக்குடி மக்களே, நீங் கள் கொற்றவைக்கு-காளிக்கு-தரவேண்டிய கடனே இன்னும் தரவில்லை. அதனல், எயினர் மன்றுகள் யாவும் பாழ்பட்டன; பகைவர் ஊரில் பசு வளம் பெருகியது; தும்மவரின் வழிப்பறி வளமோ, வற்றிப் போயிற்று, தும் மறக்குடி மக்கள் எல்லாம் அறக்குடி மக்கள் போல