பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சிலப்பதிகார விருந்து வவியடங்கிப் போனர்கள். கலே மான் ஏறி வரும் துர்க்கைக்கு நீங்கள் தர வேண்டிய காணிக்கைகளைத் தாராவிடின், அவள் உங்க ளுக்கு ஒரு சிறு வெற்றியும் வழங்கமாட்டாள் என்று முழங்கினுள். சாலினியின் தெய்வ முழக்கம்’ கேட்ட எயினர் திரண்டனர். தம் தொல்குடிப் பிறந்த குமரியைக் கொற்றவையாக ஒப்பனே செய் தனர். அக்குமரியின் குறுகி நெளிந்த கூந்தலே நீண்ட சடையாக்கி அதில் சிறிய பாம்புக்குட்டி கள் போன்ற பொன் நாண்களேச் சுற்றிக் கட்டினர்; காவல் சூழ்ந்த தோட்டப்பயிரை அழித்த காட்டுப்பன்றியின் வளைந்த வெண் கொம்பைப் பிடுங்கிப் பிறையாக அமைத்தனர்; வீரஞ்செறிந்த வயப்புலியின் வாய் பிளந்து பெற்ற மாலே வெண்பல் காலி'யை வரிசைப் படக் கட்டினர்; கோடும் புள்ளியும் கலக்கப் பெற்ற தாய புறத்தினை உடைய தோலே மேக லேயாக உடுத்தினர்; அன்போடு வயிரவில்லை வளைத்து அவள் கையில் அழகும் ஆண்மையும் தோன்றக் கொடுத்தனர்; முறுக்குண்ட கொம் பினேயுடைய கலே மான்மேல் அவளே ஏற்றினர். பாவையும், கிளியும், கானங்கோழியும், நீலமயி ஆம், பந்தும், கழங்கும் தந்து துதித்தனர்; வண்ணமும் சுண்ணமும் சாந்தமும்; அவரை, துவரை முதலியனவும், எள்ளுருண்டையும், இறைச்சி கலந்த சோறும் பணி புரியும் மறப் பெண்கள் ஏந்தி வர, வழிப்பறியின் போது