பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

硬 5. பாண்டியன் புகழு ★ ★ ஆய்ச்சியர் வாழ்த்தும் விர மறவரின் கொற்றவை வழிபாடு நிறை வுற்றது. அதைக் கண்டு களித்து நின்று கொண்டிருந்த கோவலன், குமரியின் கொற் 2)வை கோலமும் கூத்தும் முடிந்தவுடன் புண் ணிையக் கவுந்தி அடிகள்பாற்சென்று, அவள் பாகத்தைத் தொழுது, அடிகளே, இக்காரிகை கொதிக்கின்ற கோடையைப் பொறுக்கமாட் டாள்; பருக்கைக் கற்கள் பரவிக் சிடக்கும் இவ் வெய்ய பாலையில் இவள் சீறடிகள் படியா; கதிரவனின் கடுமை கிறைந்த கொடிய இவ் வெயில் வேளையில் நடப்பதைவிடப் பல்லுயிரை பும் குளிர்ச்சியூட்டிப் பாதுகாக்கும் நிலவொளி யிலேயே நடந்து செல்வது நலம், என்று கூறி ஒன்; மேலும், தன் கருத்துக்கு அரண் செய் பும் வகையில் தன் உள்ளக் கிடக்கையையும் விரிந்துரைக்கலானன்: