பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியன் புகழும் ஆய்ச்சியர் வாழ்த்தும் 49 அடிகளே, இரவில் நடந்து செல்வதால் ஏதம் ஒன்றும் இல்லே. காட்டிலே விலங்குகள் உண்டு; எனினும், அது குறித்து நாம் அஞ்சிக் கலங்க வேண்டுவதில்லை. எதிர்ப்பட்டவற்றை எற்றிப் பற்றிக்கொள்ளுதலில் வல்ல குறிஞ்சி நிலக் கரடியும் பாம்பின் வளைந்த பெரும் புற்றைத் தோண்டாது; சூர்த் தெய்வமும் யார்க்கும் கேடு சூழாது ; பாலே கி. ல த் தி ல் வாழும் ஒளி பொருந்திய கோடுகள் நிறைந்த வரி வேங்கையும் மானினத்தைப் பகைக்க மாட்டாது; மருத நிலத்தின் வளம் பெருக்கும் வான்முகில்களிடையே எழும் இடியும் ஒரு வித ஊறும் செய்யாது; இரை தேடித் திரியும் நெய்தல் கிலத்து முதலேயும் எவர்க்கும் தீங்கு கினேயாது; முல்லேக் காட்டிலும் எவ்விதக் கொடுமையும் நிகழாது. இவ்வைவகை நிலங் களும் செங்கோல் பாண்டியன் காக்கும் திருநா டென்று எங்கும் பரவிய புகழோ பெரிது! எனவே, பாண்டித் திருநாட்டில் வெயிலின் கொடுமை யன்றி வேறு கொடுமை இல்லை, என்ருன். இக்கருத்தை விளக்குவன பின் வரும் அடிகள்: - கடுங்கதிர் வேனிலிக் காரிகை பொருஅள்; படிந்தில சீறடி பரல்வெங் கானத்து; கோள்வல் உளியமுங் கொடும்புற் றகழா; வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா; அரவுஞ் சூரும் இரைதேர் முதலையும் உருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா, செங்கோற் றென்னவர் காக்கும் நாடென.