பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£1 அமைந்து இரத்தினங்களாலிழைத்த விலையுயர்ந்த ஆபரணம் போல மிளிர்கின்றது. இவ்வாறு அழ குடன் துலங்கும் சிலம்பை வருணிக்கும் பணியை மேற்கொண்டிருக்கும் ஆசிரியர், காவியத்தில் நாட்டுப் பந்து, ஒற்றுமை வேட்கை, பத்தினி வழிபாடு, பண்பு நலன்கள், வரலாற்றுப் பெருமை, இலக்கிய வளம் போன்ற உயரிய மனித இலக்கிய இயல்புகளேக் காண்கின் ருர். தாம் அவைகளேச் சுவைப்பதுமல்லாமல் மற்றவர்களும் அக் த ப் பேரின்பத்தை துகரவேண்டுமென்றும் ஆசைப்படுகின்ருர். இவர் கையாளும் முறையும் போற்றத்தக்கது. எவ்வாறு ஷேக்ஸ்பியர் நாடகங் களில் பலப்பல துணுக்கங்களே ஆய்ந்து மனக் கிளர்ச்சி அடைகின்ருேமோ, அவ்வாறே சிலப் பதிகாரத்திலும் ஆய்ந்து மகிழும்படி ஆசிரியர் கம்மை இழுத்துச் செல்கின்ருர். அவருக்கு நமது நன்றி உரித்தாகுக. ஆசிரியர் தமிழ்த்தாய்க்குச் சிறந்த பணிகளே ஆற்றித் தமிழக வரலாற்றில் ஒரு தனி இடம் பெற வே ண் டு .ெ ம ன் று மிகவும் விழைகின்றேன். தமிழ் வாழ்க ! ம. கி. சண்முகம்