பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5{} சிலப்பதிகார விருந்து எங்கனும் போகிய இசையோ பெரிதே ! பகலொளி தன்னினும் பல்லுயி ரோம்பும் நிலவொளி விளக்கின் நீளிடை மருங்கின் இரவிடைக் கழிதற் கேதம் இல்.’ (புறஞ்சேரியிறுத்த காதை, 5-18) இவ்வாறு கோவலன் கூறிய ஆர்வ மொழி களில் அவன் உள்ள த்தில் நிறைந்திருந்த பாண்டி நாட்டுப் பத்தியும், பாண்டி வேந்தன் பத்தியுமே புலனுகின்றன. ஆம் கோவலன் காவிரி நாட்டில் பிறந்து வளர்ந்த கலைச்செல் வன். ஆயினும், பாண்டி நாட்டின்மீதும் அங் நாட்டு அரசனது செங்கோல் ஆட்சியின்மீதும் அவன் கொண்டிருந்த காதலும் நம்பிக்கையும் அக்கால மக்களின் மனநிலையையும் தமிழகப் பற்றையுமே எடுத்துக் காட்டுகின்றன. கார் வேந்தர்களின் போக்கால்-முடி யாட்சியின் விளைவால்-நாடாண்ட வேந்தரின் போர் விருப்பால்-தமிழகம் மூன்ருய்ப் பிளவு பட்டுக் கிடந்ததே ஒழிய, உண்மையில் தமிழ் மக்கள் உள் ளத் தில் ஒரு பிளவும் இல்லை. சோழனுக்கும் பாண்டியனுக்கும் போர்; பாண் டியனுக்கும் சேரனுக்கும் போர்; சேரனுக்கும் சோழனுக்கும் போர் என்ற கிலே ஏற்பட்ட போது அரசன் எவ்வழி அவ்வழிக் குடிகள்,' என்று மக்கள் கின்று தீரவேண்டிய கட்டாய கிலே ஏற்பட்டது. அவ்வாறல்லாமல், போர் வெறி நீங்கி அமைதி அரசோச்சிய தமிழகத் தில் மக்கள் அனைவரிடையேயும் நாம் எல்லோ