பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியன் புகழும் ஆய்ச்சியர் வாழ்த்தும் 51 ரும் ஒரு குலம்; ஓரினம்; தமிழ்த்தாயின் மக்கள்; தமிழ் நாட்டின் குழந்தைகள்,' என்ற ஒருமை உணர்வே வேரூன்றி இருந்தது. வாழ்க்கை யில் நம்பிக்கை ஒளி எங்கேனும் கிடைக்குமோ கரையேற1 என்று மனந்தடுமாறியிருக்கும் நிலையிலும் கோவலனுக்குத் தென்னவன் செங் கோல் மீது இருந்த நம்பிக்கையின் திண்மை யைக் காட்டுவது வாயிலாக இளங்கோ அடிகள் பாண்டி வேந்தன் புகழின் பெருமையையும், கோவலனின் பரந்த உள்ளத்தையும் புலப் படுத்துகின்றர். அதோடு பழந்தமிழ் நாட்டு (Dಹಹ6fr நாட்டுப்பற்றையும், உயிானேய அர சன்பால் அவர்கள் கொண்டிருந்த அன்பை யும், சிறுசிறு எல்லேகட்குள் தங்கள் சிந்தனை யைக் குறுக்கிக்கொள்ளாமல் உயர்ந்த உள் ளம் உடையவர்களாய்-நாட்டுப்பற்றில் குறை வற்றவர்களாய் - அவர் க ள் திகழ்ந்தார்கள் என்ற வாய்மையையும் விளக்கிக் காட்டுகிருர் என்றே தோன்றுகிறதல்லவா? கோவ ல ன் கூறிய கனிவு மொழிகளைக் கேட்ட கவுந்தி அடிகள், அவ்வாறே ஆகுக!” என இசைந்தார். வெங்கதிரோனும் மலைவாயில் வீழ்ந்தான். வெண்ணிலவும் தண்ணுெளி பரப்பத் தொடங் கியது. கோவலன், கண்ணகி, கவுந்தி அடி கள் ஆகிய மூவரும் நிலவொளியில், காட்டு வழி யில், மதுரை மூதார் நோக்கிப் பயணமாயினர். காட்டு வழியெல்லாம் கடந்ததும், பொழுது