பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 சிலப்பதிகார விருந்து புலர்கின்றது; பகலவன் வருகின்ருன், என் பன போலக் காட்டுக்கோழிகள் கூ வின. மூவரும் வைகறைப் பொழுதில் தமக்குரிய ஒழுக்கத்தினின்று வழுவிய, பார்ப்பனர் வதி யும் ஒரு பகுதியைச் சேர்ந்தனர். கோவலன் ஆங்கு வந்த அரக் கரைப் பொருது வென்ற காளியின் போர்க்கோலத் தைப் பாடும் பாண ருடன் சேர்ந்து யாழ் இசைத்து மகிழ்ந்து, பின் அவர்களிடம், இங் கிருந்து மதுரை மாநகர் இன்னும் எத்தன. காதம்? என்று வினவினன். இதோ மதுரைத் தென்றல் வந்தது காணிர்; பாண்டி யன் மூதார் அருகேயே உள்ளது, என்று பாணர் விடை பகர்ந்தனர். மூவர் பயணமும் தொடர்ந்தது; கடல் ஒலி போ ஆம் ஆரவாரம் மிகுந்த மூதாரும் அவர் களே எதிர் கொண்டது. வைகையாற்றைக் கண்டு கொழுத ஐயனும் அம்மையும் மாதவத் தாட்டியாரோடு மரப்புனேயால் அதைக் கடந்து தென்கரை எய்தினர். அறவோர் அன்றிப் பிறவோர் அணுகாத மூதூரின் புறஞ்சேரியின் கண் மூவரும் விரும்பிப் புகுந்து இருந்தனர். இரவு கழிந்தது; இரவியும் தோன்றினன். கழனிகளிலும் சோலைகளிலும் பறவைகள் எழுந்து ஒலித்தன. இறைவன் கோயில் முத லியவற்றில் வலம்புரி சங்கும் காலே முரசும் முழங்கின. கோவலன் கவுந்தி அடிகளே வணங்