பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியன் புகழும் ஆய்ச்சியர் வாழ்த்தும் 53 கித் தன் மனத்துயரைப் புலப்படுத்தின்ை; பொங்கி வரும் கண்ணிரோடு தன் எண்ணங் களே எடுத்துரைத்துப் புலம்பினுன்; நெறியின் நீங்கினேன்; சிறுமையுற்றேன்; செய்தவத்தீர், முன்பின் அறியா நாட்டின்கண் முள்ளும் கல் லும் கிறைந்த அரிய வழியிடத்து அலேந்து திரிந்து வருந்தி அலமந்தேன்; பழமை பொருங் திய இந்நகர் வணிகர்க்கு என் கிலே உணர்த்தி யான் வருமளவும் அடிகாள்,தும் திருவடிகளையே காவலாக உடையாள் இக்கண்ணகி. எனவே, இவளுக்கு ஒரு தீங்கும் உண்டோ? என்று கல்லும் மண்ணும் கலங்க மொழிந்தான். ஆருத் துயருற்ற கோவல நம்பிக்குத் தம் குளிர் மொழி களால் ஆறுதல் கூறி அவன் உள்ளம் அமைதி யுறச் செய்தார் அருளே வடிவான கவுந்தி அடிகள்; பெருந்துயர் உற்ற போதும் மனைவி யுடன் பிரியா வாழ்க்கை பெற்றனே; ஆதலின், அயராது ஏகித் தங்குவதற்குத் தகுதி வாய்ந்த இடம் தேடி வருக, என்று விடை கொடுத் தனுப்பினர். அடிகளாரின் அமுத மொழி களால் ஆறுதல் பெற்றுச் சென்ற கோவலன், செல்வமும் போகமும் செழித்துக் கிடந்த பாண்டியன் பேரூரைக் கண்டு களித்துப் புறஞ் சேரிக்கண் மீண்டான். அருள் நிறைந்த ஆட்சி நடத்தும் பாண்டி யர்களின் பெரிய சிறப்பினே உடைய செங் கோலும், வெண் கொற் றக் குடையினது தன்மையும், வேலின் வெற்றியும், தன் பால் வாழும் மக்கள் வேறெங்கும் பெயர்ந்து குடி