பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சிலப்பதிகார விருந்து போகாச் சிறப்பும் புகழும் வாய்ந்த மதுரை மாநகரைக் கண்டு மகிழ்ந்த மன நிறைவுடன் புறஞ்சேரிக்கு மீண்ட கோவலன், கவுந்தி அடிகள்பால் சென்று, தீது தீர் மதுரையின் பெருமையையும், தென்னவன் கொற்றத்தின்’ கீர்த்தியையும் வாயாரப் புகழ்ந்து பேசின்ை. காவறியாக் கோவலனது ஆழ்ந்தகன்ற தமிழ் நாட்டுப்பற்றை என்னென்று போற்றுவது! கான் பிறந்து வளர்ந்த சோழ நாட்டினும் வாழப்புகுந்த பாண்டி நாட்டின் வண்புகழையே அன்ருே அவன் வாயாரப் போற்றுவதைக் காட்டுகிருர் இளங்கோ அடிகள்! பழிந்தமிழ் காட்டு மக்களிடையே சோழநாடு, பாண்டிநாடு, சேரநாடு என்ற வேற்றுமை உணர்ச்சி, அமைதி தவழும் நாட்களில் அணுவளவும் இரு ங் த தி ல் லே என்பதற்குக் கோவலனின் மொழிகளினும் சிறந்த சான்று வேண்டுமோ? இவ்வாறு பாண்டி நாட்டின் சிறப்பை எல் லாம் தமிழ் நாட்டின் சிறப்பாகவே கருதிப் போற்றிய கோவலன், கவுந்தி அடிகளிடமும் அவ்வமயம் அங்கு வந்திருந்த மாடல மறையோ ரிடமும் கான் கண்ட தீக்கவிைன் தன்மையை அச்சத்துடன் எடுத்துரைத்தான். கோவலன் சொற்களுக்குச் செவி சாய்த்திருந்த கவுந்தியடி களும் மறை ய வ னும், இவ்வெயிற்புறத்துப் பள்ளியில் இருக்கும் இருக்கை முனிவர்க்கல்லது பிறர்க்கு ஒவ்வாகாகலின், இவ்விடத்தில் தங்கு வதினின்றும் நீங்குவாயாக. கதிரவன் மறையு