பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியன் புகழும் ஆய்ச்சியர் வாழ்த்தும் 55 முன் காதலியுடன் மாட மதுரைமா நகர் புகுக, என அறிவுரை பகர்ந்தனர். அவ்வமயம் பூப்போலும் கண்களையுடைய இயக்கிக்குப் பாற்சோறு படைத்து வணங்கி விட்டு அங்கு வந்த ஆயர் முதுமகளாகிய மாதரி என்பாள் கவுந்தி அடிகளைக் கண்டு அடி கொழு தாள். அவளேக் கண்ட கவுந்தி அடிகள், தீதி லள் ; முதுமகள்; செவ்வியள் அளியள் என் றெல்லாம் அவளைப்பற்றித் தமக்குள்ளேயே தேர்ந்து, க ண் ண கியை அடைக்கலமாகத் தாக்கருதி, மாதரி , கேள் என்னெடு போக்க இளங்கொடியாகிய இவள், கற்புக்கடம் பூண்ட பொற்புடைத் தெய்வம். இவளன்றி வேறு தெய்வம் யான் கண்டிலேன். எனவே, இவளே நான் கின்பால் அடைக்கலமாகச் சேர்ப்பிக் கிறேன். தவத்தோர் அடைக்க்லம், தான் சிறி தாயினும், மிக்க பேரின்பம் தரும். எனவே, இவளுக்கு ஆயமும் காவலும் தாயும் நீயே ஆகித் தாங்க வேண்டும்,' என்று பணித்தார். மாதரியும் கவுந்தி அடிகளைத் தொழுது, கண் ணகியை அழைத்துக்கொண்டு மதில் வாயிலைக் கடந்து, தன் மனே புகுந்தாள். மாலேக் கதிர வன் ஒளியும் ஒடுங்கி மறைந்தது. மாதரியின் அன்பு மனேயில் க ண் ண கி அரும்பாடு பட்டு இனிதாகச் சமைத்த உண வைத் தன் கணவன் மகிழ்ந்து உண்ணும்படி செய்து அவனுக்கு வெற்றிலே பாக்கு அளித்து