பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$8 சிலப்பதிகார விருந்து சென்றுள்; தாழியைத் திறந்தாள். பிரையிட்ட பால் உறையவில்லை; தொழுவத்தில் காளைகள் கண்ணிர் சொரிந்த வண்ணம் கின்றன; நேற் றெடுத்த வெண்ணெயை உருக வைத்தாள்; அது உருகவில்லை; ஆட்டுக் குட்டிகள் துள்ளிக் குதித்து விளையாடாமல் முடங்கிக் கிடந்தன; பசுக்கள் உடல் நடுங்கி நின்று இரங்கின; ஆநிரைகளின் கழுத்திற்கட்டிய பெரிய மணி கள் அறுந்து வீழ்ந்தன. மாதரி திகைத்தாள்; வருவதோர் துன்பம் உண்டு!’ என அஞ்சி ள்ை; ஐயை என்னும் தன் மகளே நோக்கி, மனம் மயங்காதே! மண்ணின் மாதர்க்கணியா கிய கண்ணகி காண ஆயர்பாடியில் எரு மன் றத்து மாயவனுடன் தன்முன் ஆடிய வால சரிதை நாடகங்களில் வேல் நெடுங்கண் பிஞ்ஞை யோடு ஆடிய குரவையாடுதும் யாம்,' என்ருள். ஆய்ச்சியர் குரவை ஆரம்பம் ஆகியது. ஆயர் குலப் பெண்கள் கண்ணகி முன்னிலையில் குரவையாடினர்; பத்திச்சுவை கி ைற ங் த பாடல்கள் பல பாடிப் பரந்தாமனைப் போற்றிப் பரவினர். - குரவைக் கூத்து முடியும் கிலேயில் ஆயர் குலப் பெண்டிர், கஞ்சனின் வஞ்சகச் செயல் களே வென்றவனும், காற்றிசையும் போற்றத் தன் பின்னே வேதங்கள் தொடர்ந்து வந்து முழங்கப் பாண்டவர்பொருட்டுத் துரியோததிை யரிடம் தூதாக நடந்து சென்றவனுமாகிய கண் ணனைப் போற்ருத நா என்ன நா! நாராயணு