பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியன் புகழும் ஆய்ச்சியர் வாழ்த்தும் 59 என்ன நா என்ன நா!' என்று நாம் கூறித் கொடுத்த குரவைக் கூத்தினுள் போற்றிய கடவுள் நம் பசுவினத்திற்கு நேர்ந்த துன்பங் களே நீ க்கு க!' என்று கண்ணபிரானப் பரவினர். இவ்வாறு ஆயர் மகளிர் ஆர்வத்துடன் செய்துகொண்டதாக இளங்கோ அ டி க ள் வரைந்துள்ள பிரார்த்தனேப் பகுதியைப் படிக் கும்போது இவ்வளவே அவர்கள் செய்யவேண் டிய-செய்திருக்கக்கூடிய-பிரார்த்தனே என்ற எண்ணம் நம் மனத்தில் எழுகின்றதல்லவா? ஆல்ை, உண்மை என்ன ? ஆய்ச்சியர் உள்ளம் அதோடு ஆறுதல் அடையவில்லை. என்றும் நிகழாத தீக்குறிகள் தம் வீடுகளில் நிகழ்ந்திருக் கின்றன. அக்குறிகள் காட்டும் தீங்குகள் நேராதவாறு கருணமாமுகிலாகிய இறைவன் அருள் சுரக்கவேண்டும். அவன் அருள் தங்கள் வீடுகளை மட்டும் பாதுகாத்தல் போது மா? போதாது என்று கினேத்தனர் பழந்தமிழ் மாந்தர்-ஆயர் குல அரிவையர். இதோ! ஆய்ச்சியர் சொல்லிலும் செயலி லும் அந்தப் பண்பாடு புலனுகிறது. எங்கள் நாட்டு மன்னன் நலமாக இருக்க வேண்டும்! அவன் வெற்றியன்றி வேறென்றும் காணு விறல் உடையோனுய் விளங்கவேண்டும்! இடி யைப் படையாக உடையவன் இந்திரன். அவன்முடித்தலையை உடைத்த கொடிக்கோள் உடைய வீரத் திருவினன் பழம்புகழ் வாய்ந்த