பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

尊 5. வேந்தனை எதிர்த்து வீரப்புரட்சி :

  • நல்லறம் நாடிய மன்னரை நயந்து மகிழ்ந்து போற்றுவாள் எங்கள் தாய்; அவர் அல்லவராயின், கொன்று விழுங்கிப் பின் ஆனந்தக் கூத்திடுவாள் எங்கள் தாய், என்று அன்னே பராசத்தியின்-பாரத சத்தியின்பெருமையைப் பாடி ர்ை அரசியல் வெறி கொண்ட ஆவேசக் கவிஞர் பாரதியார். ஆம்! பின்னுளில் இரத்தினச் சுருக்கமாக அவர் பாடிய இப்பாட்டு, சிலப்பதிகார மதுரைக் காண்டத்தை அவர் ஊன்றிக் கற்றதால் கனிந்த கவிதையோ என்று நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. -

துன்பமாலை தொடங்கி அழற்படு காதை ஈருக அமைந்துள்ள ஐந்து காதைகளிலும் சிலப்பதி கார நாடகத்தின் உச்ச கிலேயைக் காண்கி ருேம்; காவியத்தின் உயிர்கிலேப் பகுதியைப்