பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தனை எதிர்த்து வீரப்புரட்சி $3 பார்க்கிருேம்; கண்ணகியின் கற்பின் பெருமை “மன்னும் இமயமலை போல ஓங்கி உயர்ந்து கிற் கும் கிலேயைக் காண்கிருேம்; சமுதாயக் கட லில் புரட்சி அலைகள் விண்முட்ட எழுந்து வீசும் நிலையை அறிகிருேம். ஆய்ச்சியர் குரவை முடிந்தது. திருமாலே யும் திருவுடை மன்னனேயும் தங்கள் இல்லத் தில் நேர்ந்த தீச்சகுனங்கள் கண்டு கலங்கிய இடைக்குல மகளிர் ஆடிப்பாடி வாழ்த்தி வணங் கிய காட்சியும் முடிந்தது. இவ்வாறு குரவை முடிந்ததும் வையையில் நீராடி நெடுமாலே வழிபடச் சென்றுள் மாதரி. அப்போது நகரத்தின் உட்பகுதியினின்றும் காட்டுத் தீப்போலப் பரவி வரும் கொடிய செய் தியை - கோவலன் கொலேயுண்ட தீச்செய் தியை-கேள்வியுற்று இடியொலி கேட்ட மயில் போல உடைந்த மனமுடையவளாய் ஒருத்தி வந்து கண்ணகி முன்னே கற்சிலே போல கின் ருள். சொல்லாடாளாய்-ஒளி இழந்த ஒவிய மாய்-நின்ற அவளேக் கண்ட கண்ணகியின் நெஞ்சம் பதைபதைக்கலாயிற்று. அவள் உள் மனத்தில் முடங்கிக் கிடந்த எண்ணங்கள் கடல் அலைகள் போலக் குமுறிக்கொண்டு வெளி வர லாயின. காதலரைக்காண்கிலேன் ! என் உள்ள ம் கலங்கி மிகவும் வருந்துகிறது ஊதுலையும் தோற் கும்படி உயிர்க்கிறது என் நெஞ்சம்! தோழி,