பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தன எதிர்த்து வீரப்புரட்சி $5 வந்து சேர்ந்த இடைக்குலப் பெண்டிர் அனே வரையும் நோக்கி, எல்லோரும் கேளுங்கள்! என்று கூறி, காய்கதிர்ச் செல்வனே நோக்கி, 'உலகத்துத் தோன்றும் பொருள்கள் யாவற் றையும் அறியும் ஆதவனே, யேறிய என் கன வர் கள்வரோ? சொல், என்ருள். மாதே, கின் கணவன் கள்வனல்லன். அவனேக் கள்வ னென்ற இவ்வூரினத் தீயுண்ணும், என்றது எங்கிருந்தோ ஒரு குரல். கதிரவனே நோக்கிக் கதறிய கண்ணகிக்குப் பதிலாகக் கிடைத்த அக்குரல் மேலும் அவள் பால் சினத்தீ மூண்டெரியத் துண்டுகோலா யிற்று. ஒற்றைச் சிலம்பைக் கையிலேந்திப் புறப்பட்டாள் கண்ணகி. மதுரை வீதிகளில் அவள் புரட்சிக்குரல் முழங்கியது. முறை கெட்ட மன்னன் ஊரிலிருந்து வாழும் நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்களே, கேளுங்கள் என் சபதத்தை என் கணவர் கள்வரே அல்லர். என் காற்சிலம்பு கொள்ளும் விலைப்பொருட் டால் அவரைக் கொன்றனர். ஈதோர் அங் யாயம்! யான் கூறும் இச்சொல் வாய்மையே என வையகம் அறிய, இறந்த என் கணவர் உயிரோடு எழவும், அவர் வாயால் தேறு நல் லுரை கேட்கவும் பெறுவேன். அவ்வாறு என் காதற்கணவர் வாய் திறந்து கூறும் வார்த்தைகளைக் கேளாமல் போவேனுயின், 'இவள் நமக்கு வருந்தத் தக்கன செய்தாள் என்று என்னே இகழுங்கள் என்று சூளுரைத் を)