பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தனை எதிர்த்து வீரப்புரட்சி $7 விழையாத மதுரை நகர் மக்கள், மன்னனே மிகவும் பழிதாற்றும் மக்கள் ஆகிவிட்டார் களாம். இவ்வுண்மையை இளங்கோ அடிகளே, 'வன் பழி தூற்றுங் குடியதே மாமதுரைக் கம்பலை மாக்கள்’ (ஊர் சூழ்வரி, 28-29) என்ற மொழிகளால் விளங்க வைக்கிரு.ர். கண்ணகியின் ஆவேசக் கோலத்தாலும் ஆத்திர மொழிகளாலும் சீற்றமுற்ற மதுரை மூதூர் மக்கள்-அல்வழிப்பட்ட அரசனேக் கொடியன் எம் இறை எனக் கண்ணிர் பரப் பிப் பழி துாற்றத் துணிந்த மக்கள்-கண்ணகி யைக் கொலேயுண்டு கிடந்த கோவலனிடம் அழைத்துச் சென்று காட்டினர். அந்தோ! அந்நேரத்தில் கன் ஆருயிர்க்காதலன் வெட் டுண்டு வீழ்ந்து கிடக்கும் கோரக் காட்சியைக் கண்டு புழுவாய்த் துடிக்கப் போகிருள் கண் ணகி என்பதை அறிந்த பகலவனும், பேரிருளே உலகிற்கு ஊட்டிக் கரிய மேற்கு மலேயின்கண் தன் சிவந்த கதிர்களைச் சுருக்கிக்கொண்டு வீழ்ந்து மறையலானன். அங்கிலேயில் கோவ லன் வீழ்ந்து கிடந்த இடத்திலிருந்து கண்ணகி அழுது அரற்றிய அரற்றலால் நகரெங்கும் 'ஒல்லென்ற ஒலியே கிரம்பியது. வெட்டுண்டு கிடந்த கோவ ல னே வாரி எடுத்து அணேத்துக்கொண்டாள் கண் ண கி. காலேயில் தன் கணவன் முடியில் சூடியிருந்த மாலையை வாங்கித் தனது நீண்ட குழலினிடத்