பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ξης யுள்ள என் அருமைப் பேராசிரியரும் தமிழ்ப் பெருக் தகையாருமாகிய உயர்திரு. ம. கி. சண்முகம், எம். ஏ., ஒல். டி., அவர்கட்கு யான் பெரிதும் கடமைப்பட் டுள்ளேன். தமிழ் இலக்கிய வளர்ச்சியிலும் என் போன்ற தமிழ் இளேஞர்களின் முன்னேற்றத்திலும் தணியாக்காதல் கொண்டுள்ள அப்பெருமகனரின் அணிந்துரை இந்நூலுக்குக் கிடைத்தது யான் பெற்ற பெரும்பேறு என்றே கருதுகின்றேன். சிலப்பதிகார விருந்து வரிசையில் வெளி வரும் தால்களே அழகிய முறையில் வெளியிட்டுத் தமிழகத்தாரின் அன்பையும் ஆதரவையும் பெறப் பேராவல் கொண்டுள்ள சாமி நிலைய'த்தார்க்கு என் நன்றி கலந்த நல்வாழ்த்துக்கள் உரியன. இந்நூல் அச்சாகும் காலத்தில் ஒப்பு நோக்குதலாகிய அரிய பணியைச் செம்மையாகச் செய்துதவிய என் மதிப் பிற்குரிய ஆசிரியப் பெருந்தகை உயர்திரு. மே. வீ. வேணுகோபாலப் பிள்?ள அவர்கட்கு என் பணிவார்ந்த வணக்கங்கள் உரியன. தம் கை வண்ணத்தின் திறத்தால் இந்நூலின் மேலட்டையைப் பொலிவு பெறச் செய்துள்ள ஒவியர் திரு. எஸ். ர ஜம் அவர்கட்கும் என் உளங்கனிந்த நன்றி உரியதாகுக. வாழிய செந்தமிழ் வாழ்க கற்றமிழர்! ந. சஞ்சீவி