பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தனை எதிர்த்து வீரப்புரட்சி 71. பொங்கி வரும் நீரைத் துடைத்துக்கொண்டே காற்ருேடு கலந்த தீப்போல விரைந்து சென் முள் வேந்தன் அரண்மனையின் வாயிலே நோக் கிப் புரட்சி விளக்க. பழந்தமிழ் மக்கள், நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே; மன்னன் உயிர்த்தே மலர் தலே உலகம், என்று கினேப்பவர்கள்தாம். ர்ாஜபத்தியை உயிரினும் சிறந்ததாகப் போற் றுபவர்கள்தாம். அத்தகைய நாட்டுப் பற்று நிறைந்த பரம்பரையின் வீரச் செல்விதான் கண்ணகி. ஆயினும், அவள் மேற்கொண்ட துணிவும் குறிக்கோளும் பழந்தமிழ்ப் பண்பாட் டிற்கே புதியதொரு விளக்கம் தருவனவாயின. இன்னுயிரினும் இனிதாக நாடாளும் இறைவ னைப் போற்றிய இனம் பழந்தமிழ் இனம் எனினும், அது அவன்பால் கொண்டிருந்த பத்தி கண் மூடிப் பத்தி அன்று. இங்கிலாந் தின் மன்னன் தவறே இழைக்கமாட்டான், என்ற நவயுக நாகரிகத்தின் பிதாக்கள் என்று சிலரால் கருதப்படும் வெள்ளேயரின் குருட்டுக் கொள்கை, பழந்தமிழ் மக்களின் பகுத்தறி விற்கும் பண்பாட்டிற்கும் ஒவ்வாததாகும். பெண்டிற்கு நாணம் உயிரினும்சிறந்ததுதான். ஆனல், அதனினும் சிறந்தது அவர்கட்குக் கற்பு, என்பது ஆன்ருேர் மொழியன்ருே? அவ்வாறே பழந்தமிழ் மக்கட்கு ராஜபத்தி உயிரினும் பெரியதுதான். ஆயின், அதனி லும் அவர்கட்குப் பெரியது தேசபத்தி. மன்