பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சிலப்பதிகார விருந்து பதைக்காக மன்னனே அன்றி, மன்னனுக் காக மன்பதை அன்று, என்னும் இவ்வுண் மையே பழந்தமிழர் அரசியல் பண்பாட்டின் ஆணிவேர் என்பதை உலகறியச் செய்த ஒப் பில்லாவாழ்க்கை கண்ணகியின் வீரவாழ்க்கை. 'குடிமக்கள் கொதிக்கும் உள்ளத்தால் சிந்தும் கண்ணிரே கூர்வாளினும் கொடியது. பெருஞ் சேனேகளாலும் அழிக்க முடியாத பேரரசுகள் கற்புடைய பெண்ணின் கண்ணிரால் அழிந்து சாம்பலாகும், என்ற உண்மைகளைப் பன்னூறு ஆண்டுகட்கு முன்பே தனியொரு தமிழ் மங்கை வேந்தனே எதிர்த்து நடத்திய வீரப்புரட்சி வாயி லாக இளங்கோ அடிகள் விளங்க வைக்கும் திறம் இனேயிலாப் பெருமை வாய்ந்தது. இவ் வுண்மை இனி வரும் சிலப்பதிகாரப் பகுதிகளா லும், உடலே-உள்ளத்தை-உயிரையே குலுக் கும் சொல்லோவியக் காட்சிகளால், இனிது விளங்கும் என்பது திண்ணம்.