பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சிலப்பதிகார விருந்து கிலத்தில் வீழ்ந்தன; ஆராய்ச்சி மணி நடுநடுங்கி யது; எட்டுத் திசைகளும் அதிர்ந்தன; சூரியனே இருள் விழுங்கியது; இரவில், வானவில் தோன் றியது; வெம்பகலில் விண் மீன்கள் வீழ்ந்தன; ஏதேர் துன்பம் நேரப்போகிறது! கோழி, வா, அரசரிடம் சென்று சொல்லுவோம், என்ருள் பாண்டி நாட்டு அரசி. பின்னர்த் தோழியர் புடை சூழ மன்ன னிடம் சென்று தான் கண்ட தீக்கனவினே உரைக்கப் புறப்பட்டாள் கோப்பெருந்தேவி. அவளைச் சூழ்ந்து சேடியர் பற்பல மங்கலப் பொருள்களே ஏந்திப் பின் சென்றனர்; கூனர், ஊமைகள், குள்ளர்கள் கூடிய குற்றேவலாளர் சூழ்ந்து வந்தனர். முதிய மங்கையர் வாழ்த்தி னர். வையம் காக்கும் பாண்டியன் பெருங் தேவி வாழ்க!' என்று ஆய ம்களிரும் காவற் பெண்டிரும் அரசியின் அடி பணிந்து புகழ்ந் தேத் தினர். இச்சிறப்புக்களுடன் கோப் பெருந்தேவி அரசனே அணுகித் தான் கண்ட இக்கனத் திறமுரைத்தாள். திருவீழ் மார்பின கிைய தென்னவர் கோமான், தேவியின் சொற்களே வியப்புடன் கேட்டுக்கொண்டிருந் தான். அந்தோ! தேவியின் சொற்களைக் கேட்டுக்கொண்டிருந்த அவன் திருச்செவிகளே இன்னும் சிறிது நேரத்தில் வேதனை நிறைந்த சொற்கள் கீயெனத் தீண்டிக் கொல்லக் காத் திருந்தன!