பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற்கட்டம் முடிந்தது! 75 அந்நிலையில் தலைவிரி கோலமாய் அழுதி கண்ணிரோடும் ஏந்திய சிலம்போடும் அரண் மனையை நோக்கிப் பாய்ந்துவரும் கண்ணகியின் கோலம் கோவேந்தனின் காவலாளியையே கலங்கச் செய்தது. அவன் கலக்கத்தைப் பன் மடங்காக்கின வீரக்கண்ணகியின் சுடுசொற் கள். வாயிலோயே! வாயிலோயே! அறிவு அற்றுப் போன-அறநினைவு அற்ற-வறியோ னின் வாயிலோயே தன் கணவனே இழந்தாள் ஒருத்தி, பாலினேயுடைய இரண்டு சிலம்பினுள் ஒன்றனே ஏந்திய கையளாய் அரண்மனையின் வாயிலிடத்தாள் என்று அறிவிப்பாயே அறி விப்பாயே என்று முழங்கிள்ை. கேட்டான் வாயிலோன்; விரைந்தான் வேந்தன்முன்; எம் கொற்கை நகரத்து வேங் தரே, வாழி! தென்திசைப் பொதியிலின் தலை வரே, வாழி! செழியரே, வாழி! பழியொடு பட ராப் பஞ்சவரே, வாழி! வென்றி தரும் வேலி னேத் தாங்கிய கொற்றவையும் அல்லள் பிடாரி யும் அல்லள்; காளியும் அல்லள்; ஆனால், அவள் தோற்றம் அஞ்சத் தக்கதாய் இருக்கின்றது. அவள் செற்றமும் வெகுளியும் மிகவும் கொண்ட வளாய்த் தோற்றுகிருள். தொழில் திறம் அமைந்த பொற்சிலம்பு ஒன்றை ஏந்திய கரத் தொடு கணவனே இழந்தாள் ஒருத்தி, அரசரே, நம் வாயிலின் முன்னிடத்தே வந்து நிற்கிருள்! ஆம்! முன்னிடத்தே வந்து கிற்கிருள் ' என்று