பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 சிலப்பதிகார விருந்து செய்தியைக் கூறினன். கேட்டான் வேந்தன். அவள் வருக ! உடனே அவளை அழைத்து வருக!' என்று கட்டளே இட்டான். இருளின் முன் ஒளி போலப் பாண்டியன் முன் சென்று கின்ருள் நீர்வாரும் கண்களோடு வீரபத்தினி. அழுத கண்களோடு அவள் கிற் கும் கிலேயைக் கண்ட மன்னன், மடக் கொடியே, நீர் சொரியும் கண்ணுேடு என் முன்னே வந்த நீ யாரோ?' என்ருன். ஊனும் உயிரும் துடிக்கத் தான் வந்த காரணத்தை இன்னும் உய்த்துணராமல் வேந்தன் விளம் பிய வெற்றுபசாரமொழிகளைக் கேட்ட வீரக் கண்ணகி, பளிர் எனப் பதிலுரைத்துப் பேச லானுள். ஆராய்ச்சி அறிவில்லாத மன்னனே, என்னே யார்? என்றல்லவர் கேட்டாய்? கூறுகிறேன்; கேள்: பொன்னி நாட்டு மன் னனப்பற்றி நீ அறிவாய் அல்லவா? ஆம்! அளத்தற்கரும்பெருமையுடையது அவன் அரச பரம்பரை. புரு ஒன்றின் உயிரைக் காக்கத் தன் ஊனே அரிந்து கொடுத்த உத்தமன் சிபிக் சக் க | வ ர் க் தி உதித்தது அம்மரபு. பசு வொன்று ஆராய்ச்சி மணியைப் பதறி அடித் துக் கண்ணிர் உகுத்தது அறிந்து அதன் துயர் தீர்க்கத் தன் ஒரே மைந்தனைத் தேர்க்காலில் இட்ட நீதி வழுவா நெறியாளனுகிய மனுநீதிச் சோழன் பிறந்தது அம்மரபு. அத்தகைய அற நெறி வழுவா அரசர் ஆண்ட பெரும்பெயர்ப் புகார்தான் நான் பிறந்த பேரூர், என்ருள்