பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற்கட்டம் முடிந்தது! 77 கண்ணகி. என்னே அவள் தேசபத்தி தேச பத்தியிலும் தன்னைப் பெற்றெடுத்த பகுதியின் பால் இருந்த தனி பத்தி தமிழகப்பற்றில் யாருக்கும் குறைந்தாள் அல்லள் வீரக்கண்ணகி; ஆயினும், தான் பிறந்த சோழ நாட்டிடத்துத் தனி அன்புடையவள். இந்த இருபதாம் நூற் ருண்டிலேயே உலகம் போற்றும் சர்வ தேசிய அறிஞர்களின் உள்ளத்திலேயே இத்தகைய பற்று தான் பிறந்த ஊரிடத்தும்-காட்டிடத் தும்-மாவட்டத்திடத்தும்-இருப்பதைக் காண் கிருேம் என்றல், ஈராயிரம் ஆண்டுகட்கு முன் கண்ணகியின் உள்ளத்தில் இத்தகைய தனிப் பட்ட அன்பு இருந்தது மிகவும் இயற்கையே அன்ருே? - தன் நாட்டின் புகழைப் பேசியதோடு நிற்கவில்லை கண்ணகி. அறநெறி பிறழ்ந்த மன்னனுக்குத் தன் காட்டின் அறமணம் கம ழும் புகழை எடுத்துக்கூறி யார் நீ?’ என்று கேட்ட காவலன் இதயத்தில் இடிவிழ-சித்தம் கலங்கச் செய்தாள் கற்பாசி. மேலும் பேச லானுள் அத்தகைய அறப்பெருமை சான்ற பூம்புகாரில் புகழ் பொருந்திய பெருங்குடியில் மாசாத்துவான் என்ற மாபெரு வணிகரின் மகனுராய்ப் பிறந்து, வாழ்தல் வேண்டி ஊழ் வினை துரப்ப உன் நகரில் நுழைந்து, என் காற்சிலம்பை விற்கக் கருதிய நேரத்தில், உன் ல்ை கொலை செய்யப்பட்ட கோவலரின் மனைவி நான்; கண்ணகி என் பெயர், என்ருள் ஆத்தி ாம் பொங்கும் குரலில்-அனல் பொழியும் விழி