பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசபத்திக்குச் சோதனை 3i ஆங்கில மொழியிலுள்ள சமூக அறிவியல் நூற்கலைக் களஞ்சியம் இவ்வாறு கூறுகிறது. ஆல்ை, ஆங்கில மொழியில் புலமையோடு மேற்குறித்த கலைக்களஞ்சியத்தில் கட்டுரை வரைந்தவர் இந்தியாவின் பண்டை வரலாற் றை-சிறப்பாக இன்பத் தமிழகத்தின் பெரு வரலாற்றை-அறியும் வாய்ப்பினே வாழ்க்கை யில் பெருதவர் போலும் இல்லையேல், பழங் தமிழ் நாட்டு மக்களின் சீரிய நாகரிகமும் அதன் பயனுய் விளங்கிய அவர்கள் நாட்டுப்பற்றின் உயர்வும் அவர் உள்ளத்திலும் உரையிலும் இடம் பெற்றிருக்கும் அன்ருே ? செந்தமிழ் நாட்டு மக்கள் சங்க காலத்தி லும் சிலப்பதிகார காலத்திலும் கொண்டிருந்த நாட்டுப்பற்றின் விழுப்பத்தினேப் பழந்தமிழ் இலக்கியம் கமக்குப் பறை சாற்றி அறிவிக் கிறது. அப்பெருநூல்களை ஊன்றிக் கற்கும் போது நந்தமிழ் முன்னேரின் நாட்டுப்பற்றைப் பற்றி நமக்கு விளங்கும் பற்பல உண்மைகளுள் ளும் தலே சிறந்த ஒர் உண்மை உண்டு. அதை கினையுந்தொறும் நம் உடல் சிலிர்க்கும்; நரம்பு களில் வீரமின்சாரம் விரைந்து பாயும். ஆம்! தமிழகத்தின் பொற்காலத்தில், அடல் வேல் ஆடவரேயன்றி, மகளிரும் வீரத் திருவினராய் விளங்கினர். இவ்வுண்மையை உறுதிப்படுத்த வல்ல எத்தனையோ இலக்கியச் சான்றுகள் தமிழ்க்களஞ்சியத்தில் நிறைந்து கிடக்கின்றன. அத்தகைய இலக்கியப் புகழும், வரலாற்றுச் 6