பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 சிலப்பதிகார விருந்து சிறப்பும் படைத்த வீரத்தமிழ் மகளிர் மரபில் பிறந்தவளே கண்ணகி. அவள் நெஞ்சில் காட் டுப்பற்று நிறைந்திருந்தது. காதற்கணவனேக் கைப்பிடித்த திருநாளில் அவள் கேட்ட அரச வாழ்த்தை அவள் என்றேனும் மறக்க முடி யுமோ? தன்னைச் சுற்றிலும் வாழும் தமிழ் மக் கள் அனேவர் நெஞ்சிலும்-அவர்கள் வாழ்க்கை யின் எல்லாத் துறைகளிலும் - குறைவின்றி விளங்கிய நாட்டுப்பற்றுணர்ச்சியை அவள் மட் டும் வெறுக்க இயலுமோ? இவ்வளவு ஏன்? தன் காதற்கொழுநன் உள்ளத்தில் ஊறிக்கிடந்த தமிழ் வேந்தர் பத்தியையும் தமிழகப் பத்தியை யும் அறியாதவளோ அவள்? அல்லள். ஆயி லும், அவள் வாழ்க்கையில் நேர்ந்த விபத்துதவிர்க்க முடியாப் பெருவிபத்து-அவள் தேச பக்திக்கே சோதனையாய் நின்றது. ஆனால், அந்தச் சோதனையிலும் வெற்றியே கண்டாள் வீரக்கண்ணகி. அவளுக்கு நேர்ந்த சோதனை யைப் போலவே பழுதின்றிப் பாண்டிநாட்டை ஆண்டு வந்த கார் வேங்தனின் தேச பத்திக் கும் பெருஞ்சோதன்ை நேர்ந்தது. ஆம்! மன்ன லும் மனிதன் அல்லனே?அவன் உள்ளத்திலும் தேச பத்தி என்ற ஊற்று, கண் திறந்து பெருகு மன்ருே? மக்களுக்கு மன்னனே உயிர் என மதிப்பது தேசபக்தி. இத்தகைய தேச பத்தி கிறைந்த மக்களின் பிரதிநிதியான கண்ணகிக் கும் சோதனை எழுந்தது தமிழ் வேந்தரின் பிரதிநிதியான பாண்டியனுக்கும் சோதனே.