பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசபத்திக்குச் சோதனை 83 விளங்தது. ஆயினும், இருவரும் சோதனையில் வென்றனர்-வேறு வேறு வழிகளில். தன் கணவனுக்கு நேர்ந்த துயரை கினேந்து மனங்குமைந்து அழுது புலம்பி அங்காளைய வழக்கம் போலக் கைம்மைக் கோலம் பூண்டு குடும்பச் சிறையில் - காலச்சிறையில்-அடை பட்டு மட்காமல், அல்வழிப்பட்ட ஆட்சி நமக்கு மட்டும் பகையன்று ; புகழ் மலிந்த தமிழினத் தின் வரலாற்றிற்கே பகையானது வாழ்தல் வேண்டி வந்தவனே வெட்டி வீழ்த்திய ஆட்சி முறை நமக்கு மட்டும் பகையன்று; காட்டில் வாழும் அத்தனே மக்கட்குமே அது நஞ்சு, எனக் கருதியது அவள் உள்ளம். உயிர்க்கு உயிரான வாழும் உரிமை பறிபோகும் நேரத் தில்-மக்களின் உயிரனேய வேந்தன் வஞ்ச னைச் செயல்களில் சிக்கிக் கிடக்கும் தருணத் தில்-துயரக் கண்ணிரில் மூழ்கிக் கிடப்பது கோழைமையென்று கருதினுள்; அறத்தை கிலே நாட்டும் போராட்டத்தில் அச்சத்திற்கும் நாணத்திற்கும் ஏது வாழ்வு? என உன்னி ள்ை. மெய்யிற்பொடியும் கையில் தனிச்சிலம்பும் ஏந்திக் கண்ணிரும் கம்பலையுமாய்த் தீ நெறிப் பட்ட கோனுட்சியை அழிக்க மக்களின் சத்தி யாய்-அறத்தின் சத்தியாய் - உண்மையான தேசபத்தியின் மாசற்ற சத்தியாய்ப் புறப்பட் டாள் மன்னன் வாழும் கோயிலே நோக்கி; அறியாமையில் மூழ்கிக் கிடந்த அவன் பழிச் செயலே. எடுத்துரைத்து இடித்துக் காட்டினுள்.