பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 சிலப்பதிகார விருந்து தான் எவ்வளவோ அல்லலுற்று அழுது புலம் பியது கண்டும் வெறும் பொட்டைப் புலம்பல்' புலம்பிய மதுரை மக்கள் கண்டு வியக்க-ஏன்மன்பதையே வாழ்த்தி வணங்க-வே க் கனே எதிர்த்து நீதிக்காக வழக்காடினுள் கண்ணகி. குடிமக்களின் வாழும் உரிமைக்காக அவள் ப்ோராடினுள். திய வேந்தனது ஆட்சி தீர்க் தொழியப் போராடினுள் அம்மாபத்தினி. தன் வாதத்தால் - வழக்குரையால் - இறந்த கன வனே எழுப்ப முடியாது என்பதை அறியாத வள் அல்லள் கண்ணகி, ஆயினும், வஞ்சகமற்ற குடிமகன் ஒருவனுக்குத் தீய வேந்தல்ை ஏற் பட்ட தீச்சொல்லே அக்கணத்திலேயே துடைக் கத் துணிந்தாள். அதோடு குடிமகன் ஒரு வன்மீது அடாத பழியைச் சுமத்தி அவனேக் கொலே புரியும் அளவிற்கு ஆட்சி ஒ ன் று இருக்குமானுல்-அது எவ்வளவு நீண்ட பெரு வரலாறு உடையதாயினும்-அதை அழித்துத் தீருவதே தேசபக்தி; அதுவே கற்பு, என்பதை அவள் தெளிந்திருக்க வேண்டும். அன்றேல், ஈராயிரம் ஆண்டுகட்குப் பின்னும் இன்னும் வழிகாட்டும் இலக்கியமாய்ப் போற்றத் தக்க ஒரு செயலே-அரசியல் புரட்சியை-அவள் செய்யத் துணிந்திருப்பாளோ? எண்ணிப்பாரா மற்கூட அவள் அந்த வீரச் செயலைச் செய் திருக்கலாம். ஆல்ை, அவளுடைய அப்புகழ் சான்ற செயலுக்கான தாண்டுகோல் அவள் உள் மனத்தில் ஊறிக் கிடந்த தேச பத்தியின் எழுச்சியாகவே இருந்திருக்க வேண்டும்.