பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசபத்திக்குச் சோதனை 35 கோவலன் தனி மனிதனே. ஆனுல், அவன் கொலேயை ஒரு தனி மனிதன் கொலேயாகக் கருதிவிட முடியாது. அது அரசியற்கொலே. எனவே, கண்ணகி செய்த புரட்சியும் தன் கண வன் இறந்த துயரத்தால்-அவனேக் கொலே செய்தார்களே என்ற சீற்றத்தால்-எழுந்த புரட்சியாயினும், அது தேசபக்தி என்ற மாசில் லாத தத்துவத்திற்கு மங்காத ஒரு விளக்கத் தைத் தரும் தலை சிறந்த அரசியற்புரட்சியா கும். ஆம் கண்ணகி-பழந்தமிழ்ப் பெண்தன்வாழ்க்கை வேறு, தன் நாட்டின் வாழ்க்கை வேறு என்று பிரித்துப் பார்த்துப் பகுத்துப் பேசும் பேதைமையை வளர்த்துக்கொள்ள வில்லே. அவளுக்கு அரசியல் வெறுங்கேர் தலோ அன்றிப் பணச்சூதோ அன்று; ஆட்சி நடக்கும் நிலப் பரப்பில் வாழும் ஒரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரை அனைத்துயிரையும் காக்க வேண்டிய புனித சத்தி அது. எனவே, அச்சத்தி பழுதுறுங்கால், அதை மாற்றவோ, முடியாவிடில்மாய்த்துப்புதிதாகப் படைக்கவோ வேண்டுவது அவள் கடமை. அத்தகைய தேச பத்தியையே தனக்குற்றதைப்போன்ற அவல கிலையில் தள்ளப்பட்ட ஒவ்வொருத்தியும் அஞ் சாது காட்ட வேண்டும். அதுவே தேச பத்தி யோடு ஒன்றி கிற்கும் ஒப்பற்ற கற்பு நெறி - கடமை நெறி-என்பதை மன்பதைக்கு விளக் கிக் காட்டிய வாழ்க்கை சிலப்பதிகாரத் தலை வியின் சீரிய வாழ்க்கை.