பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 சிலப்பதிகார விருந்து இவ்வுண்மையை உலகுள்ளவரை அழியாக் சொல் ஒவியமாய் அமைத்துக் கா ட்டுகிறது மணிமேகலை. - காதலர் இறப்பிற் கனையெரி பொத்தி ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்காது இன்னுயிர் ஈவர்; ஈயா ராயின், நன்னீர்ப் பொய்கையின் தனியெரி புகுவர்; நளியெரி புகாஅ ராயின், அன்பரோடு உடனுறை வாழ்க்கைக்கு தோற்றுடம்பு அடுவர் பத்திணிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து; அத்திறத் தாளும் அல்லளெம் ஆயிழை; கணவற் குற்ற கடுத்துயர் பொருஅள் மணமலி கூந்தல்.சிறுபுறம் புதைப்பக் கண்ணி ராடிய கதிரிள வனமுலை திண்னிதின் திருகித் தீயழற் பொத்திக் காவலன் பேரூர் கனையெரி யூட்டிய மாபெரும் பத்தினி' (மணிமேகலை, காதை, 2 : 43-55.) இவ்வாறு சிலப்பதிகாரச் செய்தியை மாதவி யின் வாயால் சித்திரிக்கிறது மணிமேகலை. அடுத்துப் பாண்டி நாட்டு வேந்தன் தன் தேசபத்திக்குற்ற சோதனையில் வெற்றி பெற்ற திறனேச் சிந்திப்போம்: தவறுவது மனித இயற்கை. மனிதனுகிய மன்னனும் அதற்கு விலக்கல்லன். ஆனல், செய்த கவற்றை உணர்ந்ததும் மனந்திருந்தப் பெறுவதே பண்புடைமை. பாண்டிய மன்னன் தவறிழைத்தான்; இழைத்த பின்னும் தன்