பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசபத்திக்குச் சோதனை 87 பிழையை உணராது இருந்தான். கண்ணகி உணர்த்த உணர்ந்ததும் அவன் திருவாயிற் பிறந்த மணி மொழிகள், பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட யானுே அரசன்! யானே கள்வன்! மன்பதை காக்கும் தென்புலங் காவல் என்முதற் பிழ்ைத்தது கெடுகளின் ஆயுள்' (வழக்குரை காதை, 74-77) என்பனவேயாகும். ஆம்! கண்ணகி கற்பின் திண்மைக்கே புதியதொரு விளக்கம் தந்தாள்! அவ்வாறே பாண்டிய வேந்தன் குடிபுரக்கரும் பண்பிற்கே ஒரு புதுவிளக்கம் தந்தான் ! தான் செய்த தவற்றை உணர்ந்த மன்னன், திருந்தி வாழ்வோம்’ என ஆசை கொள்ளவில்லை; வீழ்ந்து சாவோம்' என்றே துடித்தான். இத னினும் சி ற ங் த தேசபத்தியும் பண்பாடும் உண்டோ? மான உணர்ச்சி நிறைந்த இத் தகைய தேசபத்தியும் பண்பாடும் பெறற்கருஞ் செல்வங்கள் என்பதை முற்றிலும் உணர வல் லார் யார்? பாண்டியனைப் போன்று முடி சூடி நாடாளும் ஒரு நல்வேந்தேைலதான் அது இயலும். அந்த உண்மையையும் சிலப்பதிகார வஞ்சிக்காண்டம் செவ்விதின் உணர்த்துகிறது. வீரமன்னனுகிய சேரன் செங்குட்டுவன் செங் தமிழ்ப்புலவர் சாத்தனுர் வாயிலாக வீரக் கண் ணகியின் வரலாற்றைக் கேள்வியுற்ருன்; கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை இற்றெனக் காட்டி இறைக்குரைப் பனள்போல் நின்னுட் டகவயின் அடைந்தனள்.’