பக்கம்:சிலம்பின் கதை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொலைக்களக் காதை

107



கொல்லனைச் சந்தித்தல்

பசுக்கள் நின்ற அந்த ஆயர்கள் வீட்டை விட்டு விலகினான். தளர்ந்த நடையோடு பெருந்தெருவை அடைந்தான். முசுப்பினை உடைய எருது எதிரே வந்தது. ஆயர்களாக இருந்தால் அது தீயநிமித்தம் என்று நின்று இருப்பார். இவன் அதை அறியாதவன். அதனால் அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. அது இழுக்கு என்பதை அவன் அறிந்திலன். அவனுக்கு அதை அறிய வாய்ப்பும் இல்லை; இடையர் மன்றங்களைக் கடந்து மாநகரில் நடந்து சென்று பீடிகைத் தெருவாகிய கடைவிதியை வந்து அடைந்தான்.

நூற்றுவர் பின்வரக் கள்ளச் சிந்தையன், சட்டை யிட்டவன் விலகி ஒதுங்கி நடந்து வந்தான்; ஒரு பொற் கொல்லன்; அவன் தோற்றம் அவனைத் தனிப்படுத்திக் காட்டியது. கையில் கோல் ஒன்று அவன் வைத்திருந்தான். அதனால் அவனுக்குத் தலைமை இருந்தது என்பதை அறிய முடிந்தது. பாண்டியன் மதித்த கொல்லன் இவன் என அனுமானித்தான். அதனால் அவனை அணுகி “அரசிக்கு ஏற்றது ஒர் அணி அதற்கு நீ விலை இட்டுக் கூறமுடியுமா?” என்று கேட்டான்.

அவன் அடக்கமாக அணுகிப் பதில் உரைத்தான். “அறியேன்; எனினும் அரசனது முடிக்கலன் சமைப்பேன் யான்” என்றான். பொதித்து வைத்த காற்சிலம்பை அவன் முன் அவிழ்த்தான். காலன் இதை எதிர்நோக்கிக் காத்திருந்தது போல் அந் நிகழ்ச்சி அமைந்தது, வயிரமும் மணியும் பொதித்த அந்தச் சித்திரச் சிலம்பின் செய்கை எல்லாம் விரும்பிப் பார்ப்பதைப் போல் நடித்தான். “கோப்பெருந்தேவிக்கே இது அமையும்” என்று சிறப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/108&oldid=936422" இலிருந்து மீள்விக்கப்பட்டது