பக்கம்:சிலம்பின் கதை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்ச்சியர் குரவை

115



சுற்றி நின்றனர். மாயவன் கழுத்தில் நப்பின்னை துளப மாலையைச் சூட்டினாள். “திருமகளைப் போல் இவள் பேரழகினள்” என்று மற்றவர்கள் பாரட்டினர்; நப்பின்னை கண்ணனுக்கு மாலையிட்டு அவனோடு இணைந்து ஆட ஏனைய மகளிர் மாயவனைப் பாடினர்.

அப்பாடலுக்கு 'முல்லைத் தீம்பாணி' என்று பெயர் வழங்கினர்.

“கன்றைக் குறுந்தடியாகக் கொண்டு விளவின் கனியை உதிர்த்தவன்; அவன் இன்று நம் பசுக்கூட்டத்தில் வருவான் வந்தால் அவன் வாயில் கொன்றையம் குழ லிசையைக் கேட்போம்; தோழி” என்ற கருத்துப்படப் பாடினர்.

இவ்வாறே ஏனைய பாடல்களும் அமைந்தன; “பாம்பைக் கயிறாகக் கொண்டு கடலைக் கடந்தவன் அவன் ஆம்பலங்குழல் இசைப்பான்” என்றனர்.

“தொழுநைத் துறையில் குருந்து ஒசித்த மாயவன் முல்லைப் பண் பாடுவான்” என்று பாடினர்.

“ஆடையை ஒளித்தான்; அவன் வண்ண அழகைப் பாடுவோம்; அந்நிலையில் நாணிக் குனிந்த நங்கையின் நளினத்தைப் பாடுவோம்”.

“யமுனை ஆற்றில் கண்ணனின் நெஞ்சம் கவர்ந்த நப்பின்னையைப் பாடுவோம். அன்று நப்பினையின் இதயம் கவர்ந்த இறைவனாகிய கண்ணனைப் பாடுவோம். இருவரையும் பாடுவோம் நாம்”

“ஆடையிழந்தாள்; வளையல்களை நெகிழ்த்தாள்; தன் கைக்கொண்டு தன் மேனியை மறைத்தாள். அந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/116&oldid=936433" இலிருந்து மீள்விக்கப்பட்டது