பக்கம்:சிலம்பின் கதை.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

சிலம்பின் கதை



பேரழகியைப் பாடுவோம் நாம். அவள் முக அழகைக் கண்டு அகம் நெகிழ்ந்தவன் கண்ணன்; அவன் காதலைப் பாடுவோம் நாம்”.

கண்ணனுக்கு இடப்பக்கத்தும் பலராமனுக்கு வலப் பக்கத்தும் நப்பின்னை நின்றாள்.

மற்றும் இடம் மாறிநின்றாள் மற்றொரு முறை; இவ்விருநிலைகளில் நாரதனைப் போல நாதம் எழுப்பி யாழ் இசை இயற்றினர் மற்றவர்கள்.

கண்ணன் பலராமனுடனும் நப்பின்னையுடனும் ஆடிய ஆட்டத்தில் ஆயர் சிறுமியரும் பங்குகொண்டனர் தாளத்துக்கேற்ப அடிபெயர்த்து இவர்கள் ஆடிய குரவைக் கூத்தை யசோதை கண்டு மகிழ்ந்தாள். அதனைச் செப்பிப் பாடினர். உள்வரிப்பாடலாகத் திருமாலைப் போற்றிப் பாடினர்.

தெய்வப் பாட்டினுள் அரசர் வெற்றிகளை உள் வைத்துப் பாடியதால் இவை உள்வரிப் பாடல் எனப் பட்டன; பாண்டியன் இந்திரன் தந்த பொன்னாரத்தைப் பூண்டான்; சோழன் புலிக்கொடியை இமயத்தில் பொறித் தான்; சேரன் கடலில் எதிரிகளின் கடம்ப மரத்தைத் தடிந்தான். இவ்வெற்றி பெற்ற மன்னர்கள் மூவரும் கண்ணனே ஆவர் என்று பாடினர். நாட்டுப் பற்று தெய்வப் பற்றோடு இயைத்துப் பாடினர்.

முன்னிலை வைத்துத் திருமாலைப் பாடுதல்

“மந்தர மலையை மத்தாகவும் வாசுகியைக் கயிறாக வும் கொண்டு நீ பண்டு ஒரு நாள் கடலைக் கடைந்தாய். அத்தகைய நீ யசோதையின் கயிற்றுக்குக் கட்டுப்பட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/117&oldid=936434" இலிருந்து மீள்விக்கப்பட்டது