பக்கம்:சிலம்பின் கதை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்ச்சியர் குரவை

117



கலக்கம் அடையச் செய்தாய். இது முரண்பாடு; இது வியப்புத் தருகிறது.”

“நீ மண்உண்டபோது உன் வயிற்றில் இந்த உலகமே இருப்பதைப் பார்த்தனர். உலகமே உன் வயிற்றில் அடக்கிய நீ இப்பொழுது வெண்ணெய் உண்டது ஏன்? பசித்தா உண்டாய்? இது உன் விளையாட்டு ஆகாதோ? வியப்பிற்கு உரியது இது.”

“இரண்டடியில் மூவுலகு அளந்தாய், அதற்கு உரி யவன் நீ உன் திருவடி சிவக்கப் பாண்டவர்க்குத் துாதாகச் சென்றது ஏன்? மூவுலகும் உனக்கு உரிமையாகியது. அத்தகைய நீ நாடு கேட்கச் சென்றது வியப்பேயாகும்”

படர்க்கையில் வைத்துத் திருமாலைப்பாடுதல்

“தம்பியோடு காடு அடைந்து இராவணன் அரணாகிய “சோ” என்பதை அழித்தான். அந்த இராமனது வீரம், புகழ் இவற்றைக் கேளாத செவி செவியாகாது”.

“திருமாலைக் காணாத கண் என்ன கண்? இருந்தும் பயனற்றதாகும்; நாரணனை வழுத்தாத நா என்ன நா? அவன் புகழைப் பாடுவோமாக”

"குரவையுள் பாடிப் போற்றிய தெய்வம் நம் கறவை இனத்தைக் காப்பதாக பாண்டியன் வெற்றி முரசு உலகு எங்கும் கேட்பதாக! இந்திரன் முடியைத் தகர்த்து தொடி, யணிந்த அவன்தோளின் சிறப்பைப் பாடுவோமாக" என்று பாடினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/118&oldid=936435" இலிருந்து மீள்விக்கப்பட்டது