பக்கம்:சிலம்பின் கதை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

சிலம்பின் கதை



ஊரை எரிக்கும்” என்று ஒரு தெய்வக்குரல் எதிர் ஒலித்தது. அது அவளுக்கு ஊக்கத்தைத் தந்தது; செயல்படுத்தியது.


19. ஊரை ஒருங்குதிரட்டுதல்
(ஊர் சூழ்வரி)

அந்தக் குரல் சூரியன் தந்த விடை எனக் கொண்டாள். அவ்வளவுதான் அங்கு அவள் நிற்கவில்லை. ஆயர் சேரியை விட்டு நீங்கி ஊருக்குள் புகுந்தாள். கையில் மற்றைய சிலம்பை ஏந்தினாள் “முறை தவறிய அரசன் ஊரில் வாழ்வீர் நான் நவில்கிறேன்; கேட்பீராக” என்று குரல் கொடுத்தாள்.

“யாரும் படாத துயரம் உற்றேன்; இத்தகைய துயரத்துக்குக் காரணமான செய்தியைக் கூறுகின்றேன். கேளுங்கள்; என் கணவன் கள்வன் அல்லன் என் சிலம்பைக் கொள்ளவே இக் கொலை செய்தனர்; அதுதான் நடந்தது”

“மற்றும் அந்த உண்மையை முதலில் என் கணவன் வாய் சொல்லக் கேட்பேன்; அவனைச் சென்று பார்ப்பதே தக்கது; அந்தத் தீதுஅற்ற நல்லுரையைக் கேட்பேன்; இது அடுத்த செய்தி”.

“அவனைச் சந்தித்துப் பழியற்றவன் என்பதை அறிவேன்; அவ்வாறு அறியாவிட்டால் நான் உங்களை வீணாக அலைக்கழித்தேன் என்று கருதுங்கள்; இவள் பொய்யள் என்று சொல்லி என்னை இகழுங்கள். இது உறுதி” என்று கூறி அவலத்தை அறிவித்தாள்.

அது ஊரவர் நெஞ்சைத் தொட்டது; மதுரைமாநகர் மக்கள் கலக்கம் அடைந்தனர். “இவள் துன்பத்தை யார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/121&oldid=936438" இலிருந்து மீள்விக்கப்பட்டது