பக்கம்:சிலம்பின் கதை.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

சிலம்பின் கதை


செயல்களை அறிவிப்பேன்; கேட்பாயாக! வன்னி மரத்தையும், கோயில் மடைப்பள்ளியையும் சான்றாக வைத்து மணம் செய்து கொண்டாள் ஒருத்தி; அவளுக்கு மறுப்பு வந்த போது அவள் அதைப் பொறுக்காமல் அவற்றைச்சான்று கூற அழைக்க அவையோர் முன் அவை வந்து நின்றன. அற்புதம் விளைவித்தாள் இந்தப் பொற்பு நிறைந்த குழலாள்”.

“காவிரிக் கரையில் மணல் பாவை ஒன்று அமைத்து வைத்து, இவன் உன் கணவன் ஆவான் என்று தோழி யர்கள் கூற அச்சிறுமி அப்பாவையைக் காவிரி அலைகள் வந்து அடித்துச் செல்லாமல் அணை போட்டாள்; அதனைத் காத்தாள். அந்த இடத்தை விட்டு அகலவே இல்லை; அவள் கற்பின் திண்மை அது”.

“கரிகாலன் மகள் ஆதிமந்தி வஞ்சி நாட்டு வாலிபன் ஆட்டன் அத்தியைக் காதலித்தாள்; அவனைக் காவிரி அலை அடித்துக் கொண்டு கடலுக்குச் செல்ல வெள்ளத் தோடு இவளும் கரைஒரம் ஒடிச் சென்று கடலை விளித்து என் கணவனைக் காட்டாயோ என்று கதற அதன் அலைகள் அவனைக் கொண்டு வந்து முன் நிறுத்தின. இது தமிழகக் காதல் கதை, அதை ஒதிப் பழகியது நாங்கள்”.

“திரைகடந்து பொருள் தேடச் சென்ற கணவன் வரும் வரை கரையில் கல்லாக நின்றாள் நல்லாள் ஒருத்தி; அவன் கரை வந்து சேர அவள் பழைய கல்லுருவம் கரைந்து தன் நல்லுருவம் பெற்றாள். அசையாத மனநிலை; அவள் எங்களுக்குத் திசைகாட்டியாகத் திகழ்கிறாள்.”

“மாற்றாள் குழந்தை கிணற்றில் தவறி விழ ஆற் றாளாகித் தன் குழந்தையையும் தள்ளி இரண்டு குழந்தை களையும் அக்கிணற்றில் குதித்துக் கரை சேர்த்தாள் ஒரு வீரமகள். அவள் ஆற்றல் எங்களால் போற்றத் தக்கதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/129&oldid=936446" இலிருந்து மீள்விக்கப்பட்டது