பக்கம்:சிலம்பின் கதை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சின மாலை

131


வில்லேந்திய காவல் படைவீரர்கள், யானைகள் அனைத் தும் வெந்து ஒழிந்தன.

கற்பு இந்த அழிவினைச் செய்தது; காவல் தெய்வங் கள் அந்நகரை விட்டு வெளியேறிச் சென்றன: கற்பின் பொற்பு இவ்அற்புதத்தை விளைவித்தது.


22. தீக்கிரையான மதுரை
(அழற்படு காதை)

நகரத்து அழிவு

ஏவல் இட்ட தெய்வமாகக் கண்ணகி விளங்கினாள். அவள் ஏவலைக் கேட்டு எரி நெருப்பு மதுரையைத் தீய்த்தது. காவல் தெய்வங்கள் நகர்க் கதவுகளை அடைத்து ஊர்மக்கள் வெளியேறாமல் அடைத்து வைத்து விட்டு அவர்களைக் காவாமல் அவை வெளியேறி விட்டன.

பாண்டியன் தனக்கு ஏற்பட்ட பழியைத் தன் உயிர் கொடுத்து மாற்றினான்: வளைந்த கோலைச் செங்கோல் ஆக்கினான்; அவன் மனைவியும் அதே அரசு கட்டிலில் உடன்கட்டை ஏறினாள். பெண்ணொருத்திக்கு இழைத்த கொடுமை அதனால் ஏற்பட்ட பழியை அவன் உயிர் கொடுத்துத் தீர்த்தான். நில மடந்தைக்கு இச் செய்தியை அறிவித்தான்.

அரசுகட்டிலில் இவ்விருவரும் துஞ்சியது அரசு அதிகாரிகள் அறிந்திலர். ஆசான். பெருங்கணி, அறக்களத்து அந்தணர், காதிப் பட்டம் பெற்ற உயர் அதிகாரிகள், அரசியல் செய்திகளை எழுதும் கணக்கர்கள், மற்றும் அரசு அதிகாரிகள், அந்தப்புர மகளிர் அனைவரும் ஒவியம் போல் உரை அவிந்து கிடந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/132&oldid=936451" இலிருந்து மீள்விக்கப்பட்டது