பக்கம்:சிலம்பின் கதை.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

சிலம்பின் கதை



“அதன் வரலாறு இது : புகார் நகரத்தில் பராசரன் என்னும் கற்ற அந்தணன் சேர நாட்டுக்குச் சென்று சேர அரசனைப் பாடிப் பரிசல்கள் பெற்று வந்தான்; வழியில் பாண்டி நாட்டில் மறையவர் வாழும் ஊர் தங்கால் என்பது; அவ்வூரில் அரச மரத்தை உடைய மன்றத்தில் தங்கினான். அங்கே அவன் தன் பொதிகளை எடுத்துவைத்து விட்டுச் சற்று இளைப்பாறினான்.”

“அவ்வூர்ச் சிறுவர்கள் அவனை வந்து சூழ்ந்து கொண்டனர். அச்சிறுவர்களை நோக்கித் தன்னோடு சேர்ந்து வேதம் ஒதினால் அவர்களுக்குப் பரிசு தருவதாகக் கூறினான். அவர்களுள் வார்த்திகன் என்பான் மகன் தக்கிணன் என்பான் மிகத் தெளிவாக அம் மந்திரங்களை உச்சரித்துக் கூறினான். அவனைப் பாராட்டிப் பொன் நாண் ஒன்றினையும், அணிகலன்கள் சிலவும், கைவளையும், தோடும், இவற்றோடு பண்டப் பொதிகை ஒன்றும் அளித்துப் பாராட்டித் தன் ஊர் திரும்பினான்.”

“இக் குடும்பத்து மாந்தர் வளமுடன் அணிகள் பூண்டு நடமாடுவதைக் கண்ட அரசின் காவலர் இவன் எங்கிருந்தோ களவாடிவிட்டான் என்று வார்த்திகனைச் சிறையிட்டனர். வார்த்திகன் மனைவி கார்த்திகை என்பாள் அவ்வூர்க் கொற்றவை கோயில் முன் நின்று முறையிட்டாள்; அக் கோயில் கதவு மூடிக் கொண்டது. இதனை வேந்தன் கேட்டுத் தன் ஆட்சியில் எங்கோ கேடு நிகழ்ந்து விட்டது என்று யூகித்து அறிந்து விசாரித்தான் செய்தி அறிந்து விசாரித்து அவ் அந்தணனை விடுதலை செய்தான்.”

“தான் செய்த தவறு அதற்கு மன்னிப்புக் கேட்டு அவன் மன மகிழத் தங்கால் என்னும் ஊரில் கழனி களையும், வயலூரில் உள்ள வயல்களையும் இறையிலி நிலங்களாகத் தானம் செய்தான். மூடியிருந்த கோயில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/137&oldid=936456" இலிருந்து மீள்விக்கப்பட்டது