பக்கம்:சிலம்பின் கதை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

சிலம்பின் கதை


இரண்டு நிலைகளை ஒருங்குவைத்து ஒப்பிட்டு அவல நிலையை எடுத்துக் கூறினாள்.

அதன் பின் அவள் எங்கும் தாழ்த்தவில்லை. இரவும் பகலும் தொடர்ந்து நடந்தாள். பள்ளம் மேடு இதனை அவள் கருதவில்லை. அசுரரை அழித்த அறுமுகவேள் குடிகொண்டிருந்த திருச்செங்கோடு எனப்படும் நெடுவேள் குன்றத்தை அடைந்தாள். பூக்கள் மிக்க வேங்கை மர நிழலில் நாள்கள் பதினான்கு சென்றபின் கணவனைக் கூடினாள். வானவர் வந்து வழிக்கொண்டனர்; மலர்மாரி பொழிந்து அவளை வாழ்த்தினர். கோவலன் தன்னோடு வான ஊர்தி ஏறி உயர் வாழ்வினை அடைந்தாள்.

“அவள் கணவனைத் தொழுதாள்; தெய்வத்தைத் தொழாதாள். அத்தகைய கற்பினை உடைய பொற் பினாளைத் தெய்வம் வழிபடுகிறது” என்பதை இவள் வாழ்வு எடுத்துக் காட்டியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/141&oldid=936460" இலிருந்து மீள்விக்கப்பட்டது