பக்கம்:சிலம்பின் கதை.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

சிலம்பின் கதை



மார்ப! விரைவில் மணம் செய்துகொள்க” என்று கூறினேன் என்றாள் தலைவி. “அவனும் விரைவில் மணம் செய்து கொள்ள வரலாம்; அந்த நம்பிக்கை உள்ளது” என்று மற்றவரும் சேர்ந்து பாடினர்.

“கண்ணகி தெய்வத்தைப் பாடினால் அவள் காட்சி தருவாள். வந்தால் மண அணி வாய்க்க என்று அத் தெய்வத்தை வேண்டுவோம்” என்று அப்பெண்கள் பாடினர்.

“வானக வாழ்க்கையைப் பெற்றுவிட்ட அத்தெய்வம் கானகத்தில் நறுவேங்கை நிழலில் நின்று காட்சி தந்தாள். அத்தெய்வம் உறுதியாக வந்து அருள் செய்வாள். தலைவனைத் தலைவி மணம் செய்யும் இனிய காட்சியை இவ்வூர் காணப் போகிறது. இது பெருமை மிக்க காட்சி யாகும். இதுவரை முருகனை வழிபட்ட யாம் இனிக் கண்ணகியைத் தெய்வமாக ஏற்போம்; வழிபடுவோம்” என்று கூறிப் பாடினர். குரவைக் கூத்துப் பாடல்களைக் கேட்டு நம் காதலர் வந்தார் எனவும் பாடினர். மற்றும் சேரனின் வெற்றியைப் பாடி அவன் வாழ்க என்று வாழ்த்தினர்.


25. மலைவளம் காணுதல்
(காட்சிக் காதை)

மலைவளம் காணச் செல்லுதல்

சேரன் செங்குட்டுவன் இலவந்திகை என்னும் வெள்ளி மாடத்தில் தன் தம்பி இளங்கோவுடனும் துணைவி வேண்மாளுடனும் இருந்தான். முழவு என அருவிகள் ஒலித்தன. மேகங்கள் சோலைகளைக் கவித்தன. “அருவிகளும் சோலைகளும் உடைய மலை வளத்தைக் காண்போம்” என்று முடிவு செய்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/145&oldid=937560" இலிருந்து மீள்விக்கப்பட்டது