பக்கம்:சிலம்பின் கதை.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்சிக் காதை

145



வஞ்சி மாநகர் சேரர் ஆண்ட தலைநகர்; அதனை விட்டு நீங்கிச் சென்றான். இந்திரன் தன் பரிவாரத்தோடு செல்வதுபோல் சேரன் யானை மீது ஏறி அவன் தன் ஈற்றமும் ஆயமும் சூழ்ந்துவர அங்குச் சென்றான். திருமால் மார்பில் அணிந்திருந்த மாலைபோல் மலையை அறுத்துச் செல்லும் பேரியாற்றங் கரையின் மணல் மேட்டின் மீது தங்கினான்.

பல்வகை ஒசைகள்

அங்கே குறவர்கள் பாடிய குரவைப் பாடல் ஒசை, குறமகளிர் பாடிய பாடல் ஒசை, முருகனை ஏத்திப் பாடிய வேலன்பாணி, தினை காப்போர் எழுப்பிய ஒசை, தினைப்புனத்தில் ஒருவரை ஒருவர் விளித்து அழைக்கும் ஒசை, தேன் உடைப்பால் எழுப்பிய ஒசை, புலியொடு மோதும் யானைகளின் ஒசை, பரண்மீது ஏறிப் பறவை களை விரட்டுவார் எழுப்பிய ஒசை, குழிகளில் விழுந்த யானைகளைக் கட்டி இழுப்பவர் எழுப்பும் ஒசை, சேரன் படைகள் இயக்கத்தால் ஏற்பட்ட ஒசை எல்லாம் சேர்ந்து பேரொலி செய்தன.

காணிக்கைப் பொருள்கள்

சேர அரசனின் அரண்மனை முற்றத்தில் பிறநாட்டுப் பகை மன்னர் கொண்டு வந்து திறைப் பொருள் குவிப்பர்; அதைப்போல இம்மலைக் குறவர்கள் தம் தலைகளில் சுமந்து வந்த பல்வகைப் பொருள்களையும் கொண்டு வந்து முன்வைத்துக் காணிக்கை யாக்கினர். மலைப் பொருள்கள் அவுை: யானைத் தந்தம், அகில் கட்டை, மான்கவரி, சந்தனக் கட்டை, சிந்தூக்கட்டி, அஞ்சனத்திரள், அரிதாரம், ஏலக்கொடி, மிளகுக் கொடி, கவலைக்கொடி, கிழங்குகள், வெள்ளுள்ளி எனப்படும் காயம், தேங்காய், மா, பலா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/146&oldid=936466" இலிருந்து மீள்விக்கப்பட்டது