பக்கம்:சிலம்பின் கதை.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

சிலம்பின் கதை



அவதிக்குள் ஆக்கும் கடையன் என்ற பழிச்சொல்லை யான் அடைவதாக” என்று வஞ்சினம் கூறினான்.

அதனைக் கேட்ட அவையில் இருந்த கல்வி ஆசான் அரசனை நோக்கி “அவர்கள் இகழ்ந்தது உன்னை அன்று: சோழ பாண்டியரை; நீ சினம் ஆறுக” என்று அறிவித்தனன். “வஞ்சின மொழி கேட்டு அவர் அஞ்சி அடங்குவர் நின் வஞ்சினத்துக்கு எதிராக நின்று போர் செய்யும் மன்னர்கள் யாரும் இல்லை” என்றனன். அவர்களுள் நிமித்திகன் எழுந்து நின்று, “காலம் கூடி உள்ளது. செல்லுதற்கு உரிய நற்பொழுது இது; நீ குறித்த திசைமேல் எழுக! படை எழுச்சி பெறுக” என்று கூறினான்.

அரசன் உடனே, “வாளையும், குடையையும் வடதிசை நோக்கிப் பெயர்க்க” என ஆணை இட்டனன்.

சேனைகள் ஆரவாரித்தன; முரசு எழுந்து ஒலித்தது; இரவு இருட்டை விலக்கிய ஒளி விளக்குகளின் வெளிச் சத்தில் கொடிகள் வரிசையாக அசைந்தன. பகைவரை வாட்டும் சேனை வீரர்களும், ஐம்பெருங்குழுவினரும், எண் பேராயத்தினரும், யானை வீரர்களும், கணித்துக் கூறும் காலக் கணிதரும், அறம் கூறும் சான்றோரும், படைத்தலைவர்களும், “நில உலகை ஆளும் மன்னன் வாழ்க” என்று வாழ்த்துக் கூறினர்.

பெருங்களிறு ஒன்றின் மீது வாளையும், வெண் கொற்றக் குடையையும் வைத்து அதனை மதிற்புறத்து இருந்த கொற்றவை கோயில் முன் நிறுத்தினர்; வஞ்சிப் பூவுடன் பனம்பூவையும் அவ் யானைக்கு அணிவித்துச் சேரனின் அவைக்குச் சென்றனர்.

போரை விரும்பிப் படைக்குத் தலைமை தாங்கிய படைத் தலைவர்களுக்குப் பெருஞ்சோறு அளித்தான். வஞ்சி மாநகரில் சேரன் வஞ்சிப் பூவைச் சூடிக் கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/153&oldid=936473" இலிருந்து மீள்விக்கப்பட்டது