பக்கம்:சிலம்பின் கதை.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

சிலம்பின் கதை



செய்திகள் கூறுதல்

மாடலன் ஆகிய மறையவன் மன்னனுக்கு அச்செய்தி களை விவரித்துக் கூறினான்.

“கடற்கரைப் பாட்டில் மாதவி கூற்றில் கண்ட குறை அது ஊடலாக அமைய ஊழ்வினை காதலர் இருவரைப் பிரித்தது; அதன் தொடர் நிகழ்ச்சியாகக் கோவலன். தன் துணைவியுடன் மதுரை சென்றான். அங்கே காவலனால் பழிசுமத்தப்பட்டுக் கொலைக் களத்தில் வெட்டுண்டான்; பட்ட மரமாகிய கண்ணகி சீற்றம் கொண்டு நீதிக்குப் போராடி வழக்கில் வென்று பாண்டியனைத் துயரில் ஆழ்த்தினாள். அவன் உயிர்விட்டான் மதுரை எரிந்தது. நின்னாடு புகுந்த அப்பத்தினித் தெய்வம் இன்று கல்லாக அமைந்து இவர்கள் முடிமீது எறினாள்” என்று கதையைக் கூறினான்.

இது கடந்த செய்தி, அதனைக் கூறிமுடித்து அதன் பின் தான் கங்கைக் கரைக்கு வந்தது ஏன் என்ற சங்கையைத் தீர்க்கத் தொடங்கினான்.

அகத்தியன் வாழ் பொதிகை மலையை வலங் கொண்டு குமரியில் நீராடி வந்தான். வழியில் பாண்டிய நாட்டை அடைந்து அங்கு நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கேள்வி யுற்றான். அங்குச் சென்றதற்காகத் தன் ஊழ்வினையை அவன் நொந்து கொண்டான்.

தென்னவனை வழக்காடி வென்று கோவலன் பிழை யற்றவன் என்பதைக் கண்ணகி நிறுவினாள். அடைக்கலமாகக் கண்ணகியை இடைக்குல மகள் பெற்றிருந்தாள். அவர்களைத் தான் காக்க முடியவில்லை; அவர்களுக்குக் கேடு நிகழ்ந்தது தன்னால்தான் என்று வருந்திய மாதரி எரியகம் புகுந்து உயிர் நீத்தாள். அதிர்ச்சி மிக்க செய்தியாக இது மாடலனுக்கு அமைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/161&oldid=936481" இலிருந்து மீள்விக்கப்பட்டது