பக்கம்:சிலம்பின் கதை.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

சிலம்பின் கதை


யும், அங்கு அவன் சித்திர மண்டபத்தில் வீற்றிருந்ததையும், அவனிடம் தாம் ஆரிய மன்னரை அழைத்துச் சென்று காட்டியதையும், அதற்கு அவர்கள் உரைத்த மாற்றத்தையும் விளம்பினர்.

“வீரத்தைக் களத்தில் போட்டுவிட்டு வெறுங்கை யராகத் தவசிகள் கோலத்தில் தப்பிச் சென்றவர்களை மடக்கிப் பிடித்து வந்தது மடமை என்று சோழ அரசன் கூறினான்” என்றனர்.

மற்றும் பாண்டியன் அவைக்குச் சென்றபோது அவனும் அதேபோன்று கூறிச் “சிவனை வணங்கச் சிந்தை கொண்ட எளியவர்களை இழுத்துக் கொண்டு வந்தது சேரனுக்கு இழுக்கு” என்று உரைத்ததாக அறிவித்தனர். மன்னர் இருவரும் மதிக்காமல் உரைத்த மாற்றங்களை நீலன் என்பவன் எடுத்து உரைக்கக் காலன் போல் கடுஞ்சினம் கொண்டு ஞாலம் ஆள்வோன் ஆகிய செங்குட்டுவன் சீறி எழுந்தான்; அவன் தாமரை போன்ற கண்கள் தழல் நிறம் கொண்டன; எள்ளி நகையாடித் தம் ஆற்றலை மதிக்காமல் அவர்கள் தன்னைத் துற்றி விட்ட தாகக் கருதினான். நன்றி மறந்தவர்கள் என்று வென்றிக் களிப்பில் அவர்கள் செயலைக் கண்டித்தான்; அவர்கள் உறவைத் துண்டித்தான்.

மாடலன் அறிவுரை

“மாடலன் எழுந்தான்; மன்னவர் மன்ன! வாழ்க நின் கொற்றம்!” என்று தொடங்கி அவன் சீற்றத்தை ஆற்று விக்கத் தொடங்கினான்.

ஆட்சி ஏற்று ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன; எனினும் நீ அறச் செயலைக் கருதாது மறக்களமே கருதுகின்றாய்; காயம் இது பொய்; யாருமே உலகில் நிலைத்து வாழ்ந்தது இல்லை. எண்ணிப்பார்; புகழ்மிக்க உன் முன்னோர் மகிழ்வு மிக்க செயல்களைச் செய்து முடித்தனர்; வீரம் விளைவித்தனர்; கடம்பு எறிந்து கடலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/169&oldid=936489" இலிருந்து மீள்விக்கப்பட்டது